நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட ஒரு திசையின்றியோ மணிக்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் அதேவேளை, இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
What’s your Reaction?

