ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பயந்து விளையாடும் பும்ரா ஓவரில் இவர் 2 சிக்சர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் பும்ராவை தொடர்ந்து இலக்கு வைத்து விளையாடவுள்ளதாக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது கனவு நிஜமான தருணம்.
ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள்.
பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள்.
பயமின்றி விளையாடுமாறு அணித் தலைவர் ; கமின்ஸ் என்னிடம் சொன்னார்.
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை.
அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்;.
இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை பிரயோகிக்க முயற்சித்தேன்.
அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம்.
இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் இலக்கு வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>ரஷியாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம்!