கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(06.10.2026) கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன.
கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் பரமேஸ்வரி நாகரட்ணம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களும் கலாசாலை விரிவுரையாளர்களும் கலாசாலை சிவன் ஆலயத்தில் இருந்து மங்கல வாத்திய சகிதம் விழா மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்
தொடர்ந்து மண்டப நிகழ்வில் கலாசாலை விரிவுரையாளர்களதும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் சேவைப் பயிற்சியாளர்களதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.


