வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(06.10.2026) கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், தேசிய மட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களையும் சிறப்பாகக் கௌரவித்தார்.
அத்துடன் நிகழ்வின் முக்கிய அம்சமாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
தேசிய மட்ட விவாதப் போட்டி, அறிவிப்பாளர் போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், சாரணர் தேசிய ஜனாதிபதி விருது, இளம் விவசாய விஞ்ஞானிகள் போட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தேசிய மட்டச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


