யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 வீதி, அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(29.09.2026) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னார் – வட்டக்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


