உள்ளூர் செய்திகள்

யாழில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை 91 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது.

இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த நவம்பர் மாதம் இறுதியில் யாழில் பெய்த கடும் மழை காரணமாக டிசம்பர் மாத முற்பகுதியில் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டத்தில் , 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்றுள்ளதோடு ,டெங்கு தொற்று அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்> ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ரேடார்!

https://www.youtube.com/shorts/zdRFdNFmm9s?feature=share

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்