வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
புத்தளத்தில் நடைபெற்ற டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் கமோஷிதா நவோக்கி கலந்துகொண்டார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி தர்மதிலக மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜப்பானிய மானிய உதவியினால் நிதியளிக்கப்பட்ட டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு இலங்கையில் நிகழ்நேர மழைவீழ்ச்சியைக் கண்காணிப்பதற்கான திறனை மேம்படுத்துவதையும் வானிலை தொடர்பான அனர்த்தங்களின் தாக்கத்தைத் தணிப்பதையும் மாகக் கொண்டுள்ளது.
வானிலை கண்காணிப்பு ரேடார் கோபுரம், மத்திய செயலாக்க அமைப்பு மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படும்.
இந்த திட்டம் வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தும், மேலும் நம்பகமான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை இது செயல்படுத்துகிறது.
மேலும் வெளியேற்ற வழிகாட்டுதலில் உதவுகிறது, இதனால் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.
காமோஷிதா தனது உரையில், பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் இந்த திட்டம் பாதுகாப்பான மற்றும் மிகவும் நெகிழ்வான சமூகத்தை கட்டியெழுப்ப உதவும் என்று நம்பிகை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்> சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில