வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றிற்குள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதன் போது சுதுமலை தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு.