நாட்டில் சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்கள் பல்வேறுவிதமான சிக்கலுக்கு முகம் கொடுத்தனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
வெள்ள அனர்த்தம் மற்றும் போக்குவரத்து தடை தொற்று நோய்கள் அடிப்படை தேவைகளான உணவு உறையுள் போன்றவற்றிக்கு கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களிலும் வெள்ளம் வீட்டிற்கு சென்ற நிலையிலும் அதே வீட்டிலும் சிலர் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை சிலர் வழங்கினார்கள்.
தொண்டு நிறுவனங்கள் அதிகளவான உதவிகளை செய்து வந்தது.
அரச நிறுவனங்களின் அவசரகால நிலை உதவியானது சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கவில்லை.
இவ்வாறன சூழலில் சிலர் உதவி என்னும் பெயரில் பாண் போன்ற உணவுப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து அதனை காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டு இருந்த மக்கள் உணவினை கை நீட்டி வாங்க மறுத்தமை போன்ற சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றது.
இது அநாகரீகம் என தெரிந்தும் சிலர் இப்படி நடந்து கொண்டது தமக்கு அவமானமாக இருந்ததாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.
சோற்றுக்கு கையேந்தும் நிலைமையில் தமிழ் மக்கள் இருப்பது போல காட்டுவதற்கு சில புகழ் விரும்பிகள் முயன்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
[…] இதையும் படியுங்கள்> பாணுக்கு கூட படமெடுப்பீர்களா? […]