ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இருதரப்பிலும் காணப்படுகிறது.
ஆனால் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளது.
இரு கட்சிகளிலும் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இணைந்து செயற்படவே விரும்புகின்றனர்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு சிலர் அதனை விரும்பவில்லை.
அவர்கள் இந்த இணைவுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.
கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை தலைவர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதற்காக தோல்வியின் முழு பொறுப்பையும் கட்சி தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடுவது நியாயமற்றது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
[…] இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இரு… […]