இஸ்ரேலிய இராணுவம் காசாவின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெய்ட லஹியா நகரில் உள்ள கட்டம் ஒன்றில் தங்கி இருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம் இந்தப் பிரதேசத்தைக் குறிவைத்துக் கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள்>உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த தயார்- ஜெலன்ஸ்கி
மக்களை வெளியேற்றும் நோக்கில் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.