யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கடந்த 26 ம் திகதி நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாடியவர்கள் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
அத்துடன் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என கூறி அதனை அகற்றுமாறு தெரிவித்திருந்தனர்
பொலிஸாரின் வேண்டுகோளை ஏற்ற சிவாஜிலிங்கம் உட்பட்டவர்கள் புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அது தொடர்பில் இன்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
[…] https://pathivunews.com/ […]