நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ஓட்டங்களை அதிவேகமாக துரத்தி அடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 499 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹாரி புரூக் 171 ஓட்டங்கள எடுத்தார்.
பின்னர் 151 ஓட்டங்கள பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது.
நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்நில் 74.1 ஓவர்களில் 254 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மிட்செல் 84 ஓட்டங்கள் எடுத்தார்
இதனால் இங்கிலாந்துக்கு 104 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலகுவான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான கிராவ்லி மற்றும் லும், ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜேக்கப் பெத்தேல் – ஜோ ரூட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெற செய்தது.
இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.