இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.
அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே இங்கிலாந்து அணியே விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லரின் தலைமையில்
கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல்,ஹாரி புரூக்,பிரைடன் கார்ஸ்,பென் டக்கெட்,ஜேமி ஓவர்டன்,ஜேமி சுமித்,லியாம் லிவிங்ஸ்டன்,ஜோப்ரா ஆர்ச்சர்,அடில் ரஷீத்,ஜோ ரூட்,
சாகிப் மக்மூத்,பில் சால்ட்,மார்க் உட் அடங்கும் அதே வேளை
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில்
ஜோஸ் பட்லர் தலைமையில்
ரெஹான் அகமது,கஸ் அட்கின்சன்,ஜேக்கப் பெத்தேல்,ஹாரி புரூக்,பிரைடன் கார்ஸ்,பென் டக்கெட், ஜமி ஓவர்டன்,ஜேமி சுமித்,லியாம் லிவிங்ஸ்டன்,ஜோப்ரா ஆர்ச்சர்,அடில் ரஷீத்,சாகிப் மக்மூத்,பில் சால்ட்,மார்க் வுட்
ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்>முதல் முறையாக ஆசிய கிண்ணத்தை வென்ற U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
https://www.youtube.com/@pathivunews/shorts