பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதார்
பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க தெரிவித்துள்ளார்
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்
மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.