மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் சிலரால் தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லையென கோரியே அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்