Monday, December 23, 2024
Homeஉள்ளூர்ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு.

ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு.

முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (02.12.2024) இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.


ஒதியமலைக் கிராமத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு விசேட ஆத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்> பாணுக்கு கூட படமெடுப்பீர்களா?

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

https://www.facebook.com/share/p/1DvHHuRF7q/

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments