ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு