கல்வியில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படுமானால் சமூகத்திலே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
கல்முனை விவேகானந்தா பாலர் பாடசாலையின் ஆண்டு கலைவிழா அண்மையில் சந்தான ஈஸ்வரர் மண்டபத்தில் பால பாடசாலையின் ஆசிரியர் சரோஜினி சாந்தகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்
தொடர்ந்து பேசிய அவர்
உலகத்திலே பாரிய ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுகின்ற ஒன்றாக கல்விதான் காணப்படுகிறது.
கல்வியினால்தான் சகலதையும் சாதித்துக்கொள்ள முடியும்.
ஒன்று இரண்டு அல்ல அதிகளவான காரியங்களை இந்த கல்வியினால்தான் சாதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
ஏனென்றால், கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கின்றது.
அந்த கல்வியை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் நீங்கள் பிள்ளைகளுக்கு சரியான முறையில் கல்வியை கொடுத்தால் நிச்சயமாக சமூகத்திலே பாரிய மாற்றம் ஏற்படும்.
அது மட்டுமல்ல, உங்களை அந்த பிள்ளைகள் தரப்படுத்தும் சிறந்த கல்வியை கொடுக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கும் இருக்கின்றது.
அதேபோல் இந்த பிள்ளைகளை அண்டி வாழ்கின்ற சமூகத்துக்கும் சிறந்த கல்வியை கொடுக்கின்ற அந்தக் கடமை இருக்கின்றது.
ஆகவே ஒரு சிறந்த கல்விதான் உலகத்திலே சகலதையும் சாதிக்கக்கூடிய தன்மையும் பக்குவமும் கொண்ட கல்வி என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்