Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்பயத்தில் உள்ளாரா? மஹிந்த இராஜபக்ஸ

பயத்தில் உள்ளாரா? மஹிந்த இராஜபக்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது

இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமானம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார்

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கமைய 2024.10.10 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸசவின் பாதுகாப்பு அச்சுருத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் ட்ரோன் கருவி ஊடான குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் திட்டமிட்ட தாக்கதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.

இந் நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளாhர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments