பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சாரசபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன.
மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலங்களில் மின்சாரக்கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால் குறைப்பதாகக் கூறியது.
மின்சார சட்டத்துக்கமைய இவ்வாண்டிறுதியில் மின்கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அரசாங்கத்தினால் மின்சாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்