ஜனாதிபதியாக கோட்டாபய ராசபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எவ்வாறு பார்த்தரோ அதே போன்றே இனவாத கண்கொண்டு ஜனாதிபதி அநுர பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு முடிவைக் கொண்டுவருவோம் என சில வாக்குறுதிகள் அளித்தனர்.
ஆனால் மயிலத்தமடு, மாதவனை
மேச்சல் தரை பிரச்சனை வருடக்கணக்காக பயன்படுத்திய கால்நடை உரிமையாளர்கள் இன்று வரை வீதியில் உட்காந்திருக்கின்றனர் என கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளார்
ஆனால் தெற்கில் ஊழலுக்கு எதிராக ஆட்சி என கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்படுகின்றது. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பண ஊழல் செய்த அரசியல்வாதிகள் மற்றும் விமானப்படையின் விமானங்களை பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதுடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது.
எனவே தெற்கிலே பலமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் கடந்த கால தேர்தல்களில் வடகிழக்கில் இவர்களை நம்பி கணிசமான வாக்களித்த வடகிழக்கு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்தவண்ணமாக இருக்கின்றது என கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளார்