Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிர்க்கெட் அணி!

வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிர்க்கெட் அணி!

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ் பெர்கில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பாகிஸ்தான் அணி படைத்ததுள்ளது.

இதையும் படியுங்கள்> ‘திருநங்கை’ என்னும் பைத்தியக்காரத்தனத்தை ஒழிப்பேன் – டொனால்ட் டிரம்ப்

https://www.youtube.com/@pathivunews/shorts

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments