முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்> வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிர்க்கெட் அணி!