தமிழின அழிப்பு புதியவை

செஞ்சோலையில் உதிர்ந்த பூக்களின் நினைவாக..!

in memory of the blossoms fallen at sencholai | Pathivu News
வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ
பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும்
பல சந்த மாலை மடல் பரணி பாவையர்
நஞ்சென வீழ்ந்த குண்டுகளால்
குஞ்செனக் கருகிய
வல்லிபுனக் கொடுமையை
வரலாறு மறக்குமோ
புகரப் புங்க வன்னி மன்றில்
பவளத் துங்க வரிசை வாயுடை வஞ்சியர்
நகரவிருத்தி நாடுவிருத்தி
எனப்பயில வந்த காலை
செருவுக்கஞ்சி காலை ஏழுமணிக்கு
புக்காராவில் வந்து கொன்ற கதையை
வன்னி நிலத்து வல்லிபுனத்துக்
கொடுமையை வரலாறு மறக்குமோ
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2382910012478884
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊