ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21.07.2026) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீயணைப்புப் பணிக்காக கோட்டே மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?

