வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்ட செயலர் கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி என். சுதாகரன், SEA ஆலோசனை, நிறுவன பொது முகாமையாளர் டாக்டர். நரேந்திர டி சில்வா, Oriental Consultants Global Co அணியின் தலைவி டொமோகோ ஹட்டோரி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
திட்டத்தின் மூலோபாய நோக்கமானது வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை ஆதரிப்பதற்காக SLSEA ஒரு மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டை (SEA) ஆரம்பித்துள்ளது. இது நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதையும், மூலோபாய திட்டமிடலை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது
ஆசிய அபிவிருத்தி வங்கி ADB-யின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை CEA 2025 செப்டம்பரில் வெளியிட்ட ToR-க்கு அமைய இது நடத்தப்படுகிறது.
SEA என்பது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்சிகளில் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய திட்டமிடல் கருவியாகும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை அடையாளம் காணவும், தீர்வுகளை ஆராயவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.

What’s your Reaction?

