உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; நடந்தது இதுவா?

negombo prison incident | Pathivu News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் கைதிகள் காயமடைந்ததோடு, 2 கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
நேற்று (06) காலை மீண்டும் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் அதனைத் தடுக்க முற்பட்டபோது, கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகளைத் தெரிவித்ததன் பின்னர், பொலிஸார் இது குறித்த விசாரணைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் பாதுகாப்புக் கருதி அகுணுகொலபெலஸ்ஸ, தும்பறை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நேற்று கூடிய அமைச்சரவை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இக்குழுவை நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இக்குழுவினர் சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரித்து, அதற்கான காரணங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை, மோதலில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று (07) நடைபெறவுள்ளன. மேலும், உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்று அவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp