தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் Citizen mirror இற்கான தரம் AAA அங்கிகாரம் பெற்ற பிரதேச செயலகங்களில் ஒன்றாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மாவட்ட ரீதியில் 7 ஆம் இடத்தினையும் தேசிய ரீதியாக 48 வது இடத்தையும் பெற்று தெரிவு செய்யப்பட்டது
குறித்த நிகழ்வானது 16.06.2026 அன்று காலி முகத்திடலில் இடம்பெற்றது கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சில் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் திரு ஆலோகபண்டார ஆகியோரிடமிருந்து AAA சான்றிதழை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு சோ .ரங்கநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
மேலும் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் , களுவாஞ்சிகுடி , மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போது தனது நிருவாக்கத்திறமையாலும் ,உத்தியோகத்தர்களது ஒத்துழைப்புடனும் உற்பத்தி திறன் போன்ற போன்ற பல விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
இதில் பங்குபற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்-நடராசா பிரதீபன் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.


