உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் அதீத போதையால் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்..!

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp