உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய டெங்கு பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் ஆலயங்கள் கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் போன்ற இடங்களில் தேசிய செயல்திட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று(10.06.2026) டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் போலீஸ் திணைக்களத்தின் சுற்றாடல் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்ததாக இந்த பாரிய டெங்கு பரிசோதனை செயற்திட்டம் நேற்று சுவாமி விபுலானந்தர் இசை நடன கல்லூரியில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் தலைமையில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதிகளவு மாணவர்களைக் கொண்ட இந்த வளாகத்தில் குடிநீர் கிணறுகள் மலசலகூட வடிகான்கள் பூந்தோட்டம் சுற்றுப்புற சூழல் என்பன பூரணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக டெங்கு நோயாளிகள் காணப்படுவதனாலும் அதிலும் குறிப்பாக மண்முனை வடக்கு மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டு வருவதனால் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் இந்த பிரதேச செயலக பிரிவில் அதிகப்படியான பரிசோதனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கைகள்
சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாடசாலைகள், அரச திணைக்களங்கள், ஆலயங்கள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய செயல்திட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று , மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்தின் சுற்றாடல் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து இந்த பாரிய டெங்கு பரிசோதனை செயற்திட்டத்தை முன்னெடுத்தன.

இந்நிகழ்வு சுவாமி விபுலானந்தர் இசை மற்றும் நடனக் கல்லூரி வளாகத்தில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கும் இவ்வளாகத்தில் குடிநீர் கிணறுகள், மலசலகூடங்கள், வடிகான்கள், பூந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மண்முனை வடக்கு மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். உதயகுமார் தெரிவித்தார்.

இதனால், தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவிலான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp