கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
வாழைச்சேனை, கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப் பாடசாலை நடாத்திய திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலை அதிபர் சந்திரசேகரம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதியாக இந்தியா காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ.மாணிக்கம் நடராஜன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நிருபர்


