உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை..!

சுகாதாரம் மற்றம் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (04.06.2026) காலை 8.30 மணி முதல் தரமான ஊடக அறிவு தொடர்பாக ஊடக பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுவருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களினால் குறித்த பயிற்சிப்பட்டறை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் திறமை மிகு வளவாளர்கள் வளவாண்மை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp