உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து..!

mannar sand permits cancelled | Pathivu News

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10.05.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மணல் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க:

“மணல் உரிமையாளர்களின் தரப்பிலிருந்து அவர்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. மணல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, வறிய குடும்பங்கள் வீடுகளை அமைப்பதற்கு 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்கு 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்குமாறும், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபா வீதம் கட்டண அதிகரிப்பை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், உரிமங்களை வழங்கும் போது இதற்கான சட்ட ரீதியான விடயங்கள் சில புதிதாக வரைபு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் உரிமங்களை வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சரும் புவியியல் திணைக்கள பணிப்பாளரும் தெரிவித்தனர்.

இதன் மூலம் உரிமங்களை வழங்கும் நடைமுறையில் ஒரு முறைமை உருவாகும் என நாம் கருதுகிறோம்” என்றார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp