உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை..?

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் கேள்வி
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை தருவதில்லை எமக்கு தருவதில்லை
கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள். அந்த அறிக்கையை கேட்டால், அது கூட்டமில்லை கலந்துரையாடல் அதுக்கு அறிக்கை எழுதவில்லை என்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தையே கூட்டம் இல்லை என்கின்றனர்.
காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க இருந்த அன்றைய தினம் விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதி காணப்பட்டார். அவர் ஏன் அங்கே வந்தவர் ? அவர் எப்படிப்பட்டவர் என எல்லோருக்கும் தெரியும்.
நாம் கொழுபில் இருந்து வந்த திணைக்கள அதிகாரிகளிடம் உறுதி மொழி கேட்கவில்லை. அவர்களை யார் என்றே எமக்கு தெரியாது. நாம் எமது மாவட்ட செயலரோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரோ தமது அலுவலக கடித தலைப்பில் அதனை எழுதி தர சொல்லியே கேட்டோம். அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை எனில் , அவர்களுக்கே காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என தெரியாது என்பதால் தான் அவர்கள் அவ்வாறு தர மறுத்தனர்.
அன்றைக்கு அவர்கள் எங்களுக்கு தந்த கடிதம் உத்தியோகபூர்வ கடிதமாக எந்த திணைக்கள கோவைக்குள்ளும் இருக்காது. அந்த கடிதம் எம்மிடம் மட்டுமே இருக்கும். அரச ஆவணமாக திணைகள கோவைகளுக்குள் அந்த கடிதம் இருக்காது.
அதனால் தான் நாம் கடித தலைப்பில் கடிதம் கேட்டோம். அவ்வாறு தந்தால் தான் அதொரு ஆவணமாக கோவைக்குள் இருக்கும். கடிதத்திற்கு என தொடர் இலக்கம் இருக்கும். அவ்வாறான கடிதமே சட்ட ரீதியான ஆவணமாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
காணொளி இணைப்பு :  https://www.facebook.com/reel/26840568762204181

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp