உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) நியமனம்..!

e0ae88e0aeb4e0aea4e0af8de0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8d e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d e0aeaae0af86e0aeb0e0af81 | Pathivu News

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) அவர்களை நியமித்துள்ளதாக ஈழ தமிழர் பெருமன்றம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம்(01.04.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது.

ஈழத்தமிழர் தாயகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவந்த ஊடகவியலாளரும், குடிசார் சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான துரைராசா கஷேந்திரன் ETRA வின் வட அமெரிக்கத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கனடா, அமெரிக்கா வாழ் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும், அறியத்தருகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாயைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை வாழ்விடமாகக் கொண்டவர். 2023ஆம் ஆண்டில் இருந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய அமைதிக்கும் நல்லிணக்கத்துக்குமான நிலையம் நடாத்திவந்த மனித உரிமைகள் சான்றிதழ்க் கற்கையைப் பூர்த்திசெய்த பின்னர், கணினித் தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவத் துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்திசெய்து, தமிழ்த் தேசியப் பரப்பில் பிரபலமாயிருந்த சில தமிழ் ஊடகங்களுக்கும் வெளிநாட்டு ஆங்கில ஊடகங்கள் சிலவற்றுக்கும் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய பின்னணியும் கொண்ட இவர், யாழ் பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வியியல் துறையில் தனது கற்கையைத் தொடர்ந்தவண்ணம் தீபகற்பத்திலும், வன்னிப் பெருநிலத்திலும், ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த குடிசார் சமூக செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னான தாயகச் சூழலை நன்கு அறிந்தவர் என்ற வகையில், வட அமெரிக்காவிலுள்ள அனைத்து அமைப்புகளோடும் மக்கள் பிரதிநிதிகளோடும் தாயகத்தில் இயங்கும் ETRA அமைப்பின் தொடர்பாளராக -2026 திருகோணமலைப் பிரகடனம் முன்வைக்கும் கொள்கையை மையப்படுத்தி எந்தவொரு புலம்பெயர் அமைப்பு ரீதியான சார்பு நிலையும் இன்றி, சுயாதீனமாக அனைத்து அமைப்புகளோடும், பிரதிநிதிகளோடும், செயற்பாட்டாளர்களோடும், பொதுமக்களோடும், தொடர்பாடும் தகைமையோடு செயலாற்றுவார் என்பதை இத்தால் அறியத்தருகிறோம் என்றும்

2026 திருகோணமலைப் பிரகடனம் இறுதிப்படுத்தப்பட முன்னதாக வட அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர்களும், அவர்களது நட்புறவுகளும், தமது கருத்துக்களை ETRA வட அமெரிக்க வதிவிடப்பிரதிநிதி ஊடாக உங்கள் அனைவருக்குமான தாயகக் குடிசார் நிறுவனமாகக் கட்டமைக்கப்பபட்டுவரும் ETRA நிறுவனத்துக்கு அறியத்தருமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp