உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்றைய தினம் GMOA நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்..!

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aea4e0aebfe0aea9e0aeaee0af8d gmoa e0aea8e0aebee0ae9fe0af81 e0aea4e0aeb4e0af81e0aeb5e0aebfe0aeaf | Pathivu News

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

இன்று (31.03.2026) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி பின்வருமாறு தெரிவித்தார்:

“வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். அதனால் வரலாற்றில் அவ்வாறான விடயங்கள் பெரியளவில் நடந்ததும் இல்லை. குறிப்பாக இந்த தொழிற்சங்கம் அவ்வாறான காரியங்களைச் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. கடந்த சில நாட்களாகக் கூறப்பட்ட விடயங்களில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. எவ்வாறாயினும், வைத்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதற்குச் செவிசாய்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp