உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு..!

e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0ae85e0ae9fe0af88e0aeafe0aebee0aeb3 e0ae85e0ae9fe0af8de0ae9fe0af88 e0aeb5e0aebfe0aea8e0aebfe0aeaf | Pathivu News

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் அல்லது மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, கணினி கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம் இன்று (30.03.2026) ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

நாளை (31.03.2026) முதல் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் ஏப்ரல் 06 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகவல் சரிபார்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கணினி அமைப்பு முழுமையாகச் சீர்செய்யப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp