உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் நாளை (26.04.2026) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நாளை (26.03.2026) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மார்ச் 26ஆம் திகதி முதல் தத்தமது வங்கி கணக்குகளின் ஊடாக ‘அஸ்வெசும’ நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்