உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeafe0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0ae95e0aebfe0aeb4e0af8de0ae9ae0af8de0ae9a | Pathivu News

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (24.03.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் 550,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குத் தேவையான 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நிறுவனங்களிடம் சுமார் 68,000 மெட்ரிக் தொன் யூரியா கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் உரத்தைப் பெற்றுக்கொள்ளக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

உர இறக்குமதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவைப் பணத்தை விரைவாகச் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

தற்காலிக தீர்வுகளுக்கு அப்பால், எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நீண்டகாலத் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உணவுப் பாதுகாப்பிற்கு உர விநியோகம் மிக முக்கியமானது என்பதால், குறுகிய காலப் பயிர்களான நெல் மற்றும் மரக்கறி செய்கைக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp