உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையே சரமாரி வாள்வெட்டு..!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23.03.2026) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று(23.03.2026) இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளி ஆதாரம் : https://www.facebook.com/share/v/1APoPhC7Jp/

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp