உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை..!

e0aeaae0aea9e0ae99e0af8de0ae95e0aebee0ae9fe0af81 e0aeaae0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0ae9f | Pathivu News

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று புதன்கிழமை(18.03.2026)
ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிசாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்ட இச்சடலம் நீண்ட நாட்கள் உயிரிழந்த நிலையில் காணபட்டுள்ளதுடன் சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp