உலகம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் நன்கொடை: இலங்கைக்கு வரும் 10 உலங்குவானூர்திகள்..!

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aea8e0aea9e0af8de0ae95e0af8ae0ae9fe0af88 e0ae87 | Pathivu News

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக உலங்குவானூர்திகள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 உலங்குவானூர்திகள் பங்குனி 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு வைகாசி மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த உலங்குவானூர்திகள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த உலங்குவானூர்திகளையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலங்குவானூர்திகள் கணிசமான அளவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நன்கொடையானது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துவதாகவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உலங்குவானூர்திகள் பார்வையிடுவதற்காக இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவொன்று கடந்த தை மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தது. இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றியை அமெரிக்காவிற்கு தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp