உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு பிரதேச சபையின் வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு..!

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்று (17.03.2026) சபை முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நோன்பு திறக்கும் இந்நிகழ்வில் மத நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரமலான் மாதத்தின் ஆன்மீகப் பொருளையும், அதன் சமூகப் பண்புகளையும் விளக்கும் வகையில் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (usmaani) அவர்கள் ரமலான் சிந்தனையை நிகழ்த்தினார்.

இப்தார் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்