உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18.3.2026) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கிழக்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்