செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அண்ணன், தங்கை விபத்தில் ; நடு வீதியில் பிரிந்த உயிர்கள்..!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை (16.03.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது சகோதரியான 19 வயது யுவதி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்