உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

360 பவுண் தங்க ஆபரணங்கள்- மாட்டிய மன்னார் பெண்..!

360 e0aeaae0aeb5e0af81e0aea3e0af8d e0aea4e0ae99e0af8de0ae95 e0ae86e0aeaae0aeb0e0aea3e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0aebee0ae9f | Pathivu News

மன்னாரில் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் நேற்று (15.03.2026) அன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவரை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

கடந்த 2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. ஒரு இருமாடி வீடு, ஐந்து அறைகளைக் கொண்ட மற்றுமொரு வீடு, ஒரு கார், சுமார் 360 பவுன் தங்க ஆபரணங்கள் அடங்கும்.

முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சொத்துக்கள் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு வீடுகளும் காரும் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடையுத்தரவை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளின் போது, கடத்தல் மூலம் பெறப்பட்ட 360 பவுன் தங்க நகைகளை சந்தேக நபரின் மாமியார் பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளமை தெரியவந்தது.

பின்னர், மன்னார் பகுதியில் உள்ள பல தங்க விற்பனை நிலையங்களில் நகைகளை அவர் விற்பனை செய்துள்ளார்.

சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் என்று தெரிந்தே, அவற்றைப் பணமாக்க உதவியமைக்காக பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) அன்று கைது செய்யப்பட்டார்.

தற்போது சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp