உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் விவகாரம்-கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்..!

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜர்

கடந்த மாதம் அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த சிறுவன் தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு ஊர் காவல்துறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்றைய(12.03.2026) தினம் வியாழக்கிழமை பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

குறித்த சிறுவனின் மரணம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது உயிரிழந்த இளைஞன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் உட்பட ஆறு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

சட்டத்தரணி குருபரன் தனது சமர்ப்பணத்தில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பான புலன் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை பல சந்தேகங்கள் இருப்பதாக மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.

10 2.2026 யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பொறுப்பு அதிகாரி குறித்த சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்பாதுகாப்பிற்காக சுடப்பட்டதாக (பி) அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் முடிவு ஒன்றை கண்ட தரப்பினரால் தொடர்ந்து ஆதாரத்தை தேடும் என்ற நம்பிக்கை வைக்க முடியாது.

மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியால் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோத்தர்களான சல்மான் மற்றும் மாரசிங்க ஆகியோரின் துப்பாக்கியில் இருந்து தான் தோட்டாக்கள் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு நிலையில் குறைந்தபட்சம் இரு பொலிஸ் உத்தியோகர்களை கூட சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிட்டு கைது செய்யப்படாமை பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சட்டத்தரணி அருள் அருஸ் தனது சமர்ப்பணத்தில் துப்பாக்கி சட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின்
மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா இன்னும் கண்டுபிடிக்கப்படாமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக காணப்படுவதுடன் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியால் துளைத்துத் சென்ற துப்பாக்கி தோட்டா வெளியேறிய பகுதியை பொலிசார் இன்னும் அடையாளப் படுத்தவில்லை என மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த பொலிசார் தங்கள் பகுப்பாய்வு அறிக்கை முழுமையாக கிடைக்கவில்லை என மன்றுக்கு தெரிவித்தார்கள்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி நீதியைக் காண்பது மட்டுமல்ல நீதியை காண்பதற்கான நம்பிக்கையை ஊட்டுவதும் உரியவர்களின் பொறுப்பாக இருக்கின்ற நிலையில் பெலிஸ் விசாரணைகளில் திருப்தியற்ற தன்மை காணப்படுவதாக
தெரிவித்து விசாரணைகளை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு பாரப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp