உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமான நடந்து கொண்ட இளைஞன் விளக்கமறியலில்..!

e0aeb5e0aeb2e0aebf e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb3e0aeb0e0aebfe0aea9e0af8d e0ae95 | Pathivu News

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வலி.கிழக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்ற நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் , கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

அதனை பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , பொலிஸார் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த இரு இளைஞர்களில் ஒருவர் தொலைபேசியில் காணொளி செய்ய மற்றைய இளைஞன் தவிசாளரை அவதூறாக பேசி , தூஷண வார்த்தைகளால் திட்டியும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார்.

அதனை அடுத்து அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் , யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த மன்று , இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp