செய்திகள்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மேம்பட்டிற்கு 130 மில்லியன் நிதி ஒதுக்கீடு..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூபா 130 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக அந்நிய செலாவணியையும் ஈட்டவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
நேற்று(27.02.2026) பிற்பகல் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு சென்று அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஒல்லான்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றை பார்வையிடடபின் அங்கு கிராம மட்ட அமைப்புக்களோடு உரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மணல்காடு ஓலாந்தர் கால டச்சு தேவாலயத்திற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததுடன் மானிப்பாய் பிரதேசத்திலும் பல அழகான இடங்கள் புனரமைக்கப்படவுள்ளதாக்கவும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை வட்டரா உறுப்பினர் அகஸ்டின், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமல், பிரஜா சக்தி தலைவர் மற்றும் நிர்வாகிகள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்